'ARUMBU' EDUCATIONAL MAGAZINE -  A WINDOW TO THE WORLD AROUND US.

அரும்பு பொது அறிவுச் சஞ்சிகை

1963ஆம் ஆண்டு, 7ம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போது நானும் தோழர்கள் இருவரும் இணைந்து கையெழுத்துப் பத்திரிகையாக அரும்பு இதழை ஆரம்பித்தோம்.

முதல் இதழுக்கு "கரும்பு" எனப் பெயரிட்டு அட்டைப்படமும் வரைந்த பின்னர், இந்தியாவில் அப்பெயரில் ஒரு பத்திரிகை வெளிவருவதாக யாரோ சொன்னதால் "அரும்பு" எனப் பெயர் மாற்றம் செய்தோம்.

தொடர்ந்து மாதந்தோறும் ஒரு கையெழுத்துப் பிரதி வீதம் அரும்பை வெளியிட்டு வந்தோம். அட்டை உட்பட 40 பக்கங்கள் கொண்டதாக அப்பியாசக் கொப்பி அளவில் ஒவ்வோர் இதழும் அமைந்திருந்தது. பிரதியை எழுதும் வேலையை நானே செய்து வந்தேன்.

G.C.E. பரீட்சை நெருங்கியதும் வேலைப் பளு அதிகரித்ததால் அரும்பு வெளியிடுவதைக் கைவிட்டோம். அதன் பின்னர் அதனைத் தொடரவே முடியவில்லை.

எனினும் மீண்டும் அரும்பை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் அடிக்கடி துளிர்த்துக் கொண்டே இருந்தது. அந்த ஆர்வத்தில் 1983இல் அச்சகமொன்றை நானும் சகோதரர்களும் ஆரம்பித்தோம். எனினும் எனது கற்பித்தல் பணி காரணமாக அரும்பை வெளியிட அவகாசமே கிடைக்காமற் போய்விடடது. இறுதியில் அச்சகத்தை மூடிவிட்டுக் கம்பியூட்டர் நிலையமொன்றை ஆரம்பித்த பின்னரே அரும்பை வெளியிடும் வாய்ப்புக் கிடைத்தது.

புதிய தொடரில் "அரும்பு" 1ம் இதழ் 1997 ஜூலையில் வெளியாகியது.

அரும்பில் வெளிவரும் கட்டுரைகள்யாவும் ஆசிரியரினாலேயே எழுதப்படுகின்றன.

எம். ஹாபிஸ் இஸ்ஸதீன்

ஆசிரியர்                 

 

[ Home ] [ Agents ] [ Magazine ] [ About "Arumbu" ]

Designed by M. Irshad Hafiz
Send mail to imnhfz@gmail.com with questions or comments about this web site.
Copyright © 2001 Issadeen Memorial Educational Foundation.
Last modified: Oct 25, 2009